இனியவனின் கிறுக்கல்கள்
Friday, November 5, 2010
கார்மேகம்.
கார்மேகமாக மிதந்தது அவள் கூந்தல்,
வீசிய காற்றில் கலைந்து பெய்தது மழை,
பெய்தது அவளை எண்ணியே வறண்ட என் இதயத்தில் அல்ல,
அவளை பார்த்தே சிவந்த என் கண்களில்
.
குப்பை வண்டிக்காரியின் மகள்
இந்தியா பொருளாதாரத்தில் 11 வது இடமாம்
ஆனால் பாவம் என் வீட்டு குப்பை வண்டிக்காரியின் மகள்
இன்னமும் தேடுகிறாள் அவள் உணவை,
அவள் தாய் தன் வாழ்க்கையை தேடும் அதே
குப்பை வண்டியில்.
தொல்லைகாட்சி
மனித மனங்கள் உரையாடி மகிழ்ச்சியில் நிரம்ப வேண்டிய நம் இல்லங்களை
நிரப்புகின்றன, இந்த இயந்திர தொல்லைகாட்சியின் கூச்சல்கள்.
Tuesday, June 15, 2010
கலங்கியது எது??
நீ வாரி வீசிய கூந்தல் பட்டு கலங்கியது
என் கண்கள் மட்டுமல்ல
உன்னை எண்ணி எண்ணியே எங்கும் என் இதயமும் தான்
.
Monday, June 14, 2010
திட்டம்
இரண்டு மணி நேரம் கணினி பாடம்
ஆழந்த சிந்தனையில் என் மனம்
அவள் முகமள்ளி முத்தமிடுவது எப்படி என்று. . .
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)